25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


AI முதலீடு: GPU-க்களை விட அடிப்படை ஆராய்ச்சிக்கு முன்னுரிமை – ஸ்ரீதர் வேம்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI முதலீடு: GPU-க்களை விட அடிப்படை ஆராய்ச்சிக்கு முன்னுரிமை – ஸ்ரீதர் வேம்பு

இந்தியாசெயற்கைநுண்ணறிவு(AI) துறையில் GPU உள்கட்டமைப்பில்அதிகஅளவில்முதலீடுசெய்வதைவிட, அடிப்படை AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) கவனம் செலுத்த வேண்டும் என Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பொதுத் தேவைகளை மையமாகக் கொண்ட AI ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் UPI போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக மாறி, அதிகமான மக்களுக்கு பயனளிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Zoho-வின் இந்திய வணிகம் சுமார் 47 சதவீதம் வளர்ந்துள்ளதாகவும், அதே நேரத்தில் தரவு மையங்களுக்கான செலவுகள் ஓராண்டில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வேம்பு கூறினார். AI பயன்பாட்டுக்கான டோக்கன் செலவுகளும் அதிகரிப்பதால் நிறுவனங்களின் லாப வரம்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவ உபகரணங்கள், எட்ஜ் AI, மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

AI வளர்ச்சியை மெதுவாக்க வேண்டும் என்ற சில முன்னணி AI நிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்து சந்தேகம் தெரிவித்த வேம்பு, இந்தியா மென்பொருள் துறையை மட்டுமின்றி மருத்துவம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளிலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News